துணைவேந்தரை அரசே நியமிக்க வேண்டும் – அமைச்சர் பொன்முடி பேச்சு!
துணைவேந்தரை அரசே நியமிக்க வேண்டும் என்று பேரவையில் அமைச்சர் பொன்முடி பேசினார்.
இது குறித்து அவர் பேசுகையில், துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராக பிரதமர் உள்ளார். வேந்தராக முதலமைச்சர் இருந்தால் தான் பல்கலைக்கழக நிர்வாகம் உண்மையாக நடைபெறும்.
தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகாவில் முதல்வர் பரிந்துரைக்கும் நபர் தான் துணைவேந்தராக நியமிக்கப்படுகிறார்கள் என்றார்.