பேரவையில் அதிமுக வெளிநடப்பு – அமைச்சர் துரைமுருகன் கிண்டல்!
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று சட்டமன்ற கூட்டத் தொடரில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
இன்று பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ஜெயலலிதா பல்கலைக்கழக பெயரை மாற்றியதாக உண்மைக்கு புறம்பான கருத்தை கூறிவிட்டு அதிமுக வெளிநடப்பு செய்துள்ளனர். பிஜேபி கூட்டணியிலிருந்து வெளியே வந்து விட்டதாக அதிமுக கூறினாலும், ஆளுநரை எதிர்ப்பது மோடியை எதிர்ப்பதாகும் என்பதால் பொய்யான காரணத்தை கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டனர்.
கிராமத்தில் ஒன்று சொல்வார்கள் அதுபோல பூனைக்குட்டி தற்போது வெளியே வந்துவிட்டது என்றார்.