Thu. Dec 19th, 2024

15.11.2023 இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும்.

ரிஷபம்

மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் ஆர்வமின்றி இருப்பீர்கள். உறவினர்கள் உதவியால் பிரச்சினைகள் குறையும்.

சிம்மம்

குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி

குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வேலையில் பணிச்சுமை குறையும்.

துலாம்

குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும்.

விருச்சிகம்

உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடன் பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும்.

தனுசு

நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகும்.

மகரம்

இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும்.

கும்பம்

உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும்.

மீனம்

உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையுன் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும்.