Sat. Dec 21st, 2024

ஆயுள் தண்டனை அனுபவிக்கும் முஸ்லிம் சிறை கைதிகளை கருணை அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் -வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா…!!!

ஆயுள் தண்டனை அனுபவிக்கும் முஸ்லிம் சிறை கைதிகளை கருணை அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் _
வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.ம. முகமது கவுஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை

மதுரை மத்திய சிறையும்…
ஐந்து ஆண்டுகளை கடந்து தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஐந்து முஸ்லிம் தண்டனை சிறைக்கைதிகளும்….

மதுரை மத்திய சிறையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக விசாரணை கைதியாக இருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை 14. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை கைதியாக இருக்கக்கூடியவர்கள் எண்ணிக்கை 218. இவர்களில் ஐவர் முஸ்லீம்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெல்ஃபேர் பார்ட்டி சார்பாக தமிழக சிறை கைதிகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 100 பக்கத்திற்கு மேலாக முழுமையான தகவலை இலவசமாக அளித்துள்ளது மதுரை மத்திய சிறை நிர்வாகம்.

ஐந்து ஆண்டுகளை கடந்து தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் சிறை கைதிகளின் விபரம்..

1. L.CP. 4686/2007அஷ்ரப் த/பெ.அப்துல் மஜீத் 4/11/1998 முதல் சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல்.

2. L.CP.4101/2003 நாசர் த/பெ.காஜா மொய்தீன் 24/04/2003 முதல் சிறையில் 15 ஆண்டுகளுக்கும் மேல்.

3. L.CP.4430/2005 மீரான் மைதீன் த/பெ காதர் மொய்தீன் 19/07/2005 முதல் சிறையில் 13 ஆண்டுகளுக்கும் மேல்.

4. RP 7423/2010 அப்துல் கபூர் த/பெ மீரான் 03/08/2012 முதல் சிறையில் 6 ஆண்டுகளுக்கும் மேல்.

5. L.CP.4834/2008 ராஜா முகமது த/பெ பாரூக் 21/02/2008 முதல் சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேல்.

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்க கூடிய தண்டனை கைதிகளை கருணை அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என நமது குரலை இன்னும் அழுத்தமாக எழுப்புவோம்…!!!