உத்தரப்பிரதேசத்தில் வாயு கசிவு – 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!
உத்தரப்பிரதேசத்தில் வாயு கசிவால் மயக்கமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசம், மதுராவில் உள்ள தலைமை மருத்துவ அதிகாரி (CMO) அலுவலக வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சிலிண்டரில் இருந்து குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. இந்த வாயு கசிவால் 10 க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் மயக்கமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.