வேகமாக வண்டி ஓட்டினால் இலகுரக வாகனங்களுக்கு ₹1000 அபராதம்!
1 year ago
நவம்பர் 4ம் தேதி முதல் வாகனங்களுக்கு வேக வரம்பு அமல்படுத்தப்படும் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், வேகவரம்பை மீறி செல்லும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு ரூ.1000 அபராதமும், கனரக வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.