50 கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட் தேர்வை ஒழிக்க முடியாது – பிரேமலதா விஜயகாந்த்
50 கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட் தேர்வை ஒழிக்க முடியாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்,
50 கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட் தேர்வை ஒழிக்க முடியாது.
அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களை திமுக குழப்பி கொண்டிருக்கிறது.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு உதாரணம்.
எதற்கும் பலனில்லாத சனாதனத்தை குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர் என்றார்.