“ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விஷமத்தனம் – வைகோ!
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு, விஷமத்தனமான அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம், ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, விஷமத்தனமான அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஆளுநர் மரபுகளை மீறுவதால் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சக்திகள், சூத்திரதாரியாக இருந்து ஆளுநரைப் பயன்படுத்துகின்றனர் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். இத்தகைய முயற்சிகள் முறியக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.