அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி,டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.
மேலும் நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணயாளர்களுக்கு 10 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.