Fri. Dec 20th, 2024

பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு: ஆளுநர் மாளிகையின் அறிக்கை புறம்பானது – சங்கர் ஜிவால்

பெட்ரோல் வெடிகுண்டு வீச்சில் ஆளுநர் மாளிகையின் அறிக்கை புறம்பானது என்று காவல்துறை தலைமைஇயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை கொடுத்த அறிக்கையானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

வினோத் வீசிய 2 பாட்டில்கள் சாலையில் வைத்திருந்த தடுப்பரண் அருகே விழுந்தன. பாதுகாப்பு காவலர்கள் விழிப்புடன் செயல்பட்டதால் ஆளுநர் மாளிகை நுழைவாயிலிருந்து 30 மீட்டர் தூரத்தில் வினோத் கைது செய்யப்பட்டார்.

இது ஒரு தனிப்பட்ட நபர் செய்த செயலாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்பது சொல்வது பொய்.

ஆளுநர் மாளிகை முன் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்று சொல்வதும் உண்மைக்கு புறம்பானது. புகாரில் தெரிவிக்கப்பட்டது போல அத்துமீறி ஆளுநர் மாளிகைக்குள் யாரும் நுழைய முற்படவில்லை.

மேலும், ஏப்ரல் 19ம் தேதி 2022ம் ஆண்டு ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கட்டைகள் வீசப்பட்டன என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

அச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆளுநர் மற்றும் மாளிகைக்கு காவல்துறையால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படுகிறது என்றார்.