Fri. Dec 20th, 2024

அரியவகை நோயால் தவித்த 4 மாத குழந்தை – மறுவாழ்வு கொடுத்த கிண்டி மருத்துவர்கள்!

அரியவகை நோயால் தவித்த 4 மாத குழந்தைக்கு மறுவாழ்வு கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர்.

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ‘பியர் ராபின் சிண்ட்ரோல்’ என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தை டேவினிவுக்கு, இலவசமாக சிகிச்சை அளித்து மருத்துவர்கள் மறுவாழ்வு கொடுத்துள்ளனர்.

கீழ் தாடை வளர்ச்சியடையாமை, நேராக படுக்க வைத்தால் மூச்சு திணறி உடல் முழுவதும் நீலமாக மாறுவது, பால் குடித்தால் மூக்கு வழியாக வெளியேறுவது போன்ற சிரமங்களால் அக்குழந்தை அவதியுற்றுள்ளது.