2 வயதான இஸ்ரேலிய பெண்களை விடுதலை செய்தது ஹமாஸ்!
கடந்த சில நாட்களாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
போர் அச்சம் காரணமாக இஸ்ரேலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், 2 வயதான இஸ்ரேலிய பெண்களை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்துள்ளது.
ஏற்கெனவே 2 அமெரிக்க பெண்களை விடுத்த ஹமாஸ், தற்போது இஸ்ரேலிய பெண்களை விடுவித்துள்ளது
எகிப்து மற்றும் கத்தார் நடத்திய பேச்சுவார்த்தையில் அடுத்தடுத்து பணயக்கைதிகள் விடுதலை செய்துள்ளது.
விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.