சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் – நீதிமன்றத்தில் பொது தீட்சதர் குழு மறு ஆய்வு மனு!
சிதம்பரம் நடராஜர் கோயிலின் பொது தீட்சதர்கள் குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்தது.
அந்த மனுவில்,
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என்று இந்திய சமய அறநிலையத்துறை ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், கடந்த அக்டோபர் 17ம் தேதி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும். இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.