மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளால் உயிரிழந்தார்!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளால் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். இவரை பக்தர்கள் ‘அம்மா’ என்று அழைத்து வந்தனர்.
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பெண்களும் கருவறைக்குள் சென்று வழிபட வழிவகுத்தவர் இவர்தான்.
82 வயதாகும் இவருக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இவருடைய உயிரிழப்பு செய்தி பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.