தீமைக்கு எதிராக உங்களுடன் நிற்கிறேன் – இஸ்ரேலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்
கடந்த சில நாட்களாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே கடுமையான போர் நிகழ்ந்து வருகிறது.
நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார்.
அப்போது, நடைபெற்ற இந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் பைடன் பேசுகையில், “உங்கள் மக்களைப் பாதுகாக்க நீங்கள் உழைக்கும்போது நாங்கள் இஸ்ரேலின் ஆதரவைத் தொடர்வோம். அப்பாவிப் பொதுமக்களுக்கு மேலும் சோகத்தைத் தடுக்க நாங்கள் உங்களுடன் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நட்பு நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றுவோம் என்றார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வந்து சென்ற நிலையில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சென்றுள்ளார். அப்போது பேசிய பிரதமர் சுனக், விரவாதம் என்ற தீமைக்கு எதிராக இஸ்ரேலுடன் நிற்கிறேன் என்றார்.