Fri. Dec 20th, 2024

அதிமுகவிற்கு வரும் காலம் வசந்த காலம் – விஜயபாஸ்கர் பேட்டி!

பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பிரகாசமாக வெற்றி வாய்ப்புடன் அதிமுகவிற்கு வரும் காலம் வசந்த காலம் என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அதிமுகவின் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளர் விஜயபாஸ்கர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இதன் பின்னர் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.மேலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பொங்கல் வழங்கப்பட்டது

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சி.விஜயபாஸ்கர் அதிமுகவின் எதிர்காலம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பிரகாசமாக வெற்றி வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் இரண்டாவது அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் திறக்காவிட்டால் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

கரம்பக்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவரையும் 24 மணி நேரமும் செயல்பட சட்டமன்றத்தில் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பிறகும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை தமிழக முதல்வர் இதில் தலையிட்டு உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

இந்த பிரச்சனையை அரசு கண்டும் காணாமல் போய் இருப்பதன் விளக்கத்தை கூற வேண்டும்.மக்கள் பிரச்சனையை ஓங்கி குரல் கொடுக்கின்ற இயக்கமாக அதிமுக உள்ளது ஆனால் ஆளுங்கட்சி மிகவும் சுணக்கமாக செயல்படுகிறது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொலிவோடும் வலிமையோடும் உள்ளது.அதிமுகவிற்கு வரும் காலம் வசந்த காலம் .அதிமுக ஆட்சிக்காலத்தில் எட்டு மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டு 7000 கோடி நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு 140 கோடி ரூபாய்க்கு நிதி அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தற்போது பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டத்திற்காக திமுக ஆட்சியில் ஒரு ரூபாய் கூட பணம் ஒதுக்காதது ஏன் இதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும்.தற்போது புதிய வகை வைரஸ் ஒன்று வந்துள்ளது.

காய்ச்சலை இல்லாமல் உடம்பு வலி சளி ஆகியவற்றோடு வருகிறது
இதற்கு முன்னேற்றத்திற்கு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் காய்ச்சல் முகாம் என்று அரசு அறிவித்தது ஆனால் அரசு அறிவித்த காய்ச்சல் முகாம் பெயரளவுக்கு மட்டுமே செயல்படுகிறது.

அரசு அறிக்கை மூலமாக செயல்படாமல் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் பி.கே.வைரமுத்து, நகர செயலாளர்கள் க.பாஸ்கர், எஸ்.ஏ.எஸ்.சேட் என்ற அப்துல் ரகுமான் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளைகளாக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைத்து அணியினர் கலந்து கொண்டனர்.

அமானுல்லா புதுக்கோட்டை