உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் பதிலளிக்க வேண்டும்” – அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு!
இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 3ஆம் கட்ட பாதயாத்திரை நடைபெற்றது.
இந்த தொடக்க நிகழ்வில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசுகையில்,
பிரதமர் மோடி தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை உலக நாடுகளுக்கும் கொண்டு செல்கிறார்.
தமிழகத்தின் வளர்ந்த கலாச்சாரத்தை பற்றி இந்த நாடே பெருமைப்படுகிறது.
ஊழலை ஒழிக்க வேண்டும் என பிரதமர் உறுதிமொழி எடுத்துள்ளார். ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க முனைப்போடு உள்ளார்.
ஊழலின் மொத்த உருவமாக உள்ள திமுக, காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டும்.
பாரதத்தை துண்டாட ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை அழிக்கப்போகிறேன் என சொல்கிறார்.
தமிழக மக்கள் அவர்களுக்கு தேர்தலில் பதில் அளிக்க வேண்டும். தமிழகம் விரும்பும் மாற்றத்தை அண்ணாமலை வழங்குவார் என்று பேசினார்.