‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் தொடங்கினார் அண்ணாமலை!
3ஆம் கட்ட என் மண் என் மக்கள் நடைபயணத்தினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கினார்.
பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனையை தமிழகம் முழுவதும் எடுத்துச் சொல்லும் நோக்கில் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கினார். இந்த பயணத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று திருப்பூர் மாவட்டம், அவிநாசி சேவூர் சாலையில் 3ம் கட்ட ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையை தொடங்கினார். அப்போது, இந்த பாதயாத்திரையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.