இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி : அகமதாபாத் மைதானத்தில் கடல் அலையாய் திரண்ட ரசிகர்கள்!
இன்று பிற்பகல் நடைபெற உள்ள 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று பாட்னா, பீகார் உட்பட பல மாநிலங்களில் ரசிகர்கள் கோவில்களில் பூஜை செய்து வருகின்றனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இன்று நடைபெற உள்ள ஆட்டத்தை முன்னிட்டு, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் கூட்டம் அலை, அலையாய் திரண்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்புப் பணிக்காக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஐசிசி உலகக் கோப்பையில் இன்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.