Fri. Dec 20th, 2024

ஆயுத பூஜை – 2,665 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : போக்குவரத்துறை அறிவிப்பு!

ஆயுத பூஜையையொட்டி 2,665 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது –

ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 20 முதல் 22ம் தேதி வரை சென்னையிலிருந்து 2,665 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பெங்களூரு, கோவை, திருப்பூரிலிருந்து பிற ஊர்களுக்கு செல்ல 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து இயக்கப்படும்.

காஞ்சி, திருத்தணி, ஓசூர், திருப்பதிக்கு பூவிருந்தமல்லி பைபாஸ் நிறுத்தத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

இவ்வாறு போக்குவரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.