இஸ்ரேலிலிருந்து 21 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
இஸ்ரேலிலிருந்து இதுவரை 21 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிலியத்திலிருந்து வந்த இந்திய வம்சாவளி மாணவர்களை வரவேற்க சென்னை விமான நிலையம் வந்தார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“ஆபரேஷன் அஜய்யின் முதல் கட்ட நடவடிக்கையில் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கோவை, திருச்சி, கரூர், திருவள்ளூர், கடலூர், தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், நாமக்கல் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றார்.