Fri. Dec 20th, 2024

“16,000கன அடி நீர் திறக்க சண்டையிடுவோம்” – அமைச்சர் துரைமுருகன்!

“16,000கன அடி நீர் திறக்க சண்டையிடுவோம்” என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கர்நாடகவின் இத்தகைய போக்கிற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று காவிரி நீரை திறந்து விட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில், “16,000கன அடி நீர் திறக்க சண்டையிடுவோம்” என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 16,000 கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் இன்றைய சிடபிள்யூஎம்ஏ கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்துவோம்.

மேட்டூர் அணையில் 10 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது, இந்த அணையில் இருந்து விவசாயிகளுக்கு தண்ணீர் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.