Fri. Dec 20th, 2024

காவிரி நீர் திறக்க முடியாதுப்பா… – கர்நாடக முதலமைச்சர் திட்டவட்டம்!

கடந்த சில நாட்களாக காவிரி நீர் பிரச்சினை பூதாகரமாக வெடித்து வருகிறது. காவிரியிலிருந்த தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் கர்நாடகவின் இத்தகைய போக்கிற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி நீரை திறந்து விட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரியிலிருந்து 3 ஆயிரம் கன அடி நீரை திறக்க முடியாது- கர்நாடகா அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் காவிரியில் நீர் திறக்க முடியாது. காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்றார்.