லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் ED ரெய்டு!
சென்னை போயஸ் கார்டனில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அதிபர் மார்ட்டின் இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவராக உள்ளார். தற்போது இவரது வீடு மட்டும் அல்லாது அவரது மருமகன் ஆதவ் அர்ஜூன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
கடந்த மே மாதம் ஜி.ஸ்கொயர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்தபோது இவர்கள் வீட்டிலும் 2 நாட்கள் சோதனை நடத்தப்பட்டது.
ARICE நிறுவனத்தின் உரிமையாளரான ஆதவ் அர்ஜூன் வீட்டில் அந்நிறுவனம் தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது.