Fri. Dec 20th, 2024

காசா எல்லையில் டாங்கிகளுடன் இஸ்ரேலின் பாதுகாப்புப் படை – வைரலாகும் வீடியோ

கடந்த சனிக்கிழமையிலிருந்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே யுத்தம் நடைபெற்று வருகிறது.

இந்த யுத்தத்தில் இஸ்ரேலில் பல கட்டிடங்கள் தரைமட்டாகியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். போருக்கு அஞ்சி இஸ்ரேல் மக்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

நேற்று, ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் ஏவப்பட்டு காசா மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கும் போது காசா வானலையின் காட்சி வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஹமாஸுடனான போருக்கு மத்தியில் காசா எல்லையில் டாங்கிகளுடன் இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.