ஆதரவற்ற முதியவர்கள் ஆடிய நடனத்தைப் பார்த்து தேம்பி அழுத நீலகிரி ஆட்சியர்! வைரல் வீடியோ
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கூடலூர் முதியோர் இல்லத்தில் நடந்த முதியோர் தின நிகழ்ச்சியில் நீலகிரி ஆட்சியர் அருணா கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கிருந்த முதியவர்களுக்கு இனிப்புகள், சல்வை அணிவித்தார்.
அப்போது, பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர் நடனம் ஆடினர். அவர்கள் நடனத்தைப் பார்த்த ஆட்சியர் அருணா கண்ணீர் விட்டு தேம்பி அழுதார்.
இவர் அழுதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆட்சியரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.