Fri. Dec 20th, 2024

கல்விக்கு வயது தடையல்ல என்று கூறிய 101 வயது மூதாட்டி உயிழரிந்தார்!

கல்விக்கு வயது தடையல்ல என உணர்த்திய கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி கார்த்தியாயினி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது (101).

கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்வில் 98 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்தவர் கார்த்தியாயினி.

முதியோர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கேரள எழுத்தறிவு இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும்,‘அக்ஷரா லக்ஷம்’ திட்டத்தில் கல்வி கற்ற மிகவும் வயதானவர் என்ற பெருமையை கார்த்தியாயினி பெற்றிருந்தார்.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக இன்று அவர் உயிரிழந்தார். அவருடைய இறப்பிற்கு சமூகவலைத்தளங்களில் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.