Fri. Dec 20th, 2024

இஸ்ரேலில் பற்றி எரியும் நகரங்கள் – ஹமாஸ் அமைப்பினருக்கு சீனா ஆதரவு!

ஹமாஸ் அமைப்புக்கு எங்களால் கண்டனம் தெரிவிக்க முடியாது என்று சீனா தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமையிலிருந்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த யுத்தத்தில் பல கட்டிடங்கள் தரைமட்டாகியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். போருக்கு அஞ்சி இஸ்ரேல் மக்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இஸ்ரேலுக்கு இந்தியா உட்பட பல நாடுகள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு எங்களால் கண்டனம் தெரிவிக்க முடியாது என்று சீனா தெரிவித்துள்ளது.

இது குறித்து சீனா வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான போரில் நாங்கள் எந்த நாட்டையும் கண்டிக்க முடியாது. ஹமாஸ் இயக்கத்தை நாங்கள் எதிர்க்கமாட்டோம். அந்த அமைப்புக்கு எங்களால் கண்டனம் தெரிவிக்க முடியாது. இந்த போரில் சீனா எப்போதும் நீதியின் பக்கமே நிற்கும். இரு தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடித்து, அமைதியாக இருந்து, மக்களைக் காத்து, நிலைமை மேலும் மோசமடையாமல் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.