Sun. Oct 6th, 2024

வீட்டில் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்யும்போது தப்பித்தவறி இதையெல்லாம் செய்து விடாதீங்க…!

வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வழிபட்டால் அதற்கென்று தனி விதிமுறைகள் இருக்கிறது. அதை பின்பற்றி வழிபட்டால் மகிழ்ச்சியும், செல்வ வளமும் வீட்டில் பெருகும்.

சிவலிங்கத்தை வீட்டில் வைத்து எப்படி வழிபாடு நடத்தலாம் என்று பார்ப்போம் –

​சிவ வழிபாடு :

இந்து மதத்தில் அதிகம்பேர் வழிபடும் தெய்வம் சிவ பெருமான்தான். சிவனுக்கு உருவ வழிபாடு கிடையாது. சிவலிங்கம் வடிவில் தான் கோவில்களில் சிவ பெருமான் காட்சி தருகிறார். மிகச் சில கோவில்களில் தான் சிவனை மனித உருவில் வழிபட முடியும். இதனால் பக்தர்கள் வீடுகளில் சிறிய சிவ லிங்கம் வைத்து வழிபடுவார்கள்.

சாதாரண சிவலிங்கத்தை விட நர்மதை நதியிலிருந்து எடுக்கப்பட்ட கற்களால் செய்யப்பட்ட சிவலிங்களை வீட்டில் வைத்து பூஜை செய்தால் மங்கலம் பெருகும். சிவலிங்கத்தை வீட்டில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கலாம்.

சிவலிங்கத்திற்கு வாரத்திற்கு ஒரு முறை அபிஷேகம் செய்ய வேண்டும்.

காய்ந்த நிலையில் சிவலிங்கத்தை வைக்கக்கூடாது.

அபிஷேகம் செய்யும் போது சிவலிங்கத்தில் மஞ்சள் பூசக்கூடாது.

கடைகளில் வாங்கி வரும் பாக்கெட் பாலைக் கொண்டு நேரடியாக சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யக் கூடாது. பசும்பாலால் மட்டுமே அபிஷேகம் செய்ய வேண்டும்.

சிவலிங்கம் வைக்கும் இடத்தை அடிக்கடி மாற்றக்கூடாது.

சிவலிங்கத்தை கங்கை நீர் போன்ற புனித தீர்த்தங்கள் ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும்.

சிவலிங்கம் அருகே பார்வதி மற்றும் விநாயகரின் சிலைகளை வைக்க வேண்டும்.

சிவலிங்கத்திற்கு துளசியை கொண்டு பூஜை செய்யக் கூடாது. வில்வத்தை பயன்படுத்தி மட்டுமே பூஜை செய்ய வேண்டும்.

வீட்டின் மூலையில் சிவலிங்கத்தை வைக்கக் கூடாது.