Fri. Dec 20th, 2024

“வரித்துறை சோதனையில் எந்த உள்நோக்கம் இல்லை” – அண்ணாமலை பேட்டி

“அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனையில் உள்நோக்கம் இல்லை” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாட்கள் உள்ளன. இன்னும் பல வேலைகள் உள்ளன. 5 மாநில பேரவை தேர்தல் பாஜகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கவனம் செலுத்தி பணிகள் மேற்கொள்ளப்படும்.

கட்சியின் கட்டமைப்பை இன்னும் வலிமைப்படுத்த உள்ளோம். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனையில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்றார்.