நடிகர் நாசரின் தந்தை உயிரிழந்தார் – சோகத்தில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் நாசர் தந்தை மெஹபூப் பாட்ஷா வயது மூப்புக் காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 95.
நடிகர் நாசர் தந்தை மரணச் செய்தி தமிழ் சினிமாத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நாசர் தந்தை மெஹபூபா பாட்ஷா, நகை பாலிஷ் செய்யும் சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஆனால், தன் மகனை நல்ல முறையில் நடிப்புக் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார்.
இன்று தன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இதனையடுத்து, அவரது உடல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தட்டான்மலையில் உள்ள சொந்த வீட்டில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் நாசருக்கு சினிமாத்துறையினர், ரசிகர்கள் ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.