உங்களால் இந்திய நாடு பெருமிதம் கொள்கிறது – வீரர்களுடன் பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை…!
ஆசிய விளையாட்டில் வீரர்களின் செயல்திறனைக் கண்டு நாடு பெருமிதம் கொள்வதாக பிரதமர் மோடி நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
இன்று ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது அவர் வீரர்களிடம் பேசுகையில், ஆசிய விளையாட்டில் வீரர்களின் செயல்திறனைக் கண்டு நாடு பெருமிதம் கொள்கிறது. விளையாட்டு வீரர்களின் பயற்சியாளர்களுக்கும், தேசத்தின் சார்பில் நன்றி. 140 கோடி இந்தியர்கள் சார்பாக விளையாட்டு வீரர்கள் அனைவரையும் வரவேற்கின்றேன்.
உங்களின் கடின உழைப்பு மற்றும் சாதனைகளால் நாடு முழுவதும் கொண்டாட்ட சூழல் நிலவுகிறது. இந்தியாவின் பதக்க எண்ணிக்கையானது. நாட்டின் வெற்றியின் அறிகுறி என்று பேசினார்.