உண்மையில் அதிமுகவுக்கு இஸ்லாமியர்கள் மீது அக்கறையா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி
“அதிமுகவுக்கு இஸ்லாமியர்கள் மீது முன் எப்போதும் இல்லாத அக்கறை இப்போது ஏன் வந்தது? “
இன்று தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், 36 இஸ்லாமியர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிறையிலேயே உயிரிழந்துள்ளனர்.
வயது மூப்பு, உடல்நலக்குறைவை கருத்தில் கொண்டு பரிசீலனை செய்து அவர்களை விடுக்க வேண்டும் என்று பேசினார்.
இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அதிமுகவுக்கு உண்மையிலேயே இஸ்லாமியர்கள் மேல் அக்கறை இருக்கிறதா.
இன்றைக்கு இஸ்லாமிய சிறைவாசிகள் முன் விடுதலை பற்றிப் பேசும் அதிமுக, 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருந்தது?
இஸ்லாமியர்கள் மீது முன் எப்போதும் இல்லாத அக்கறை இப்போது ஏன் வந்தது?
உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், ஆளுநர் இடத்தில் கோப்புகள் பல மாதங்களாக காத்திருக்கிறது. ஆளுநர் ரவியை சந்தித்து அதற்கான அழுத்தம் கொடுக்க தயாராக இருக்கிறார்களா? என்று சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சராமரியாக கேள்வி எழுப்பினார்.