Fri. Dec 20th, 2024

திமுக எம்.பி. தயாநிதி மாறன் மனைவியிடம் மர்ம நபர்கள் ₹99,000 மோசடி!

திமுக எம்.பி. தயாநிதி மாறன் மனைவியிடம் ₹99,000 மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மனைவியிடம், வெளிநாட்டு எண்ணிலிருந்து போன் செய்த மர்ம நபர்கள் ஆக்சிஸ் வங்கியிலிருந்து பேசுவதுபோல் இந்தியில் பேசி ரூ.99 ஆயிரம் மோசடி செய்துள்ளனர்.

இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.