Fri. Dec 20th, 2024

வரலாற்றில் முதல்முறையாக “சிறு வணிகர்களுக்கு சமாதான திட்டம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சிறு வணிகர்களுக்கு சமாதான திட்டம் கொண்டுவரப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

வணிகர்கள், வணிக வரித்துறை இடையேயான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ரூ.50 ஆயிரத்திற்கு கீழ் வரி, வட்டி, அபாரத்தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

ரூ.10 லட்சம் வரி நிலுவை வைத்துள்ள வணிகர்கள் 20% வரியை செலுத்தினால் போதும்.

வணிகர்களால் அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரி, வட்டி, அபராதம் நிலுவையில் உள்ளது. பழைய நிலுவைத் தொகையை வசூலிக்க சமாதான திட்டத்தை கொண்டு வருகிறோம்.

வணிகர்கள் நிலுவைத் தொகையை செலுத்துவதில் 4 வரம்புகள் நிர்ணயம் செய்யப்படும். தமிழ்நாடு வரலாற்றில் வணிகர்களுக்கு இத்தகைய சலுகை வழங்குவது இதுவே முதல்முறையாகும்.

வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரும். இத்திட்டம் பிப்ரவரி 2024ம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும் என்றார்.