திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் சிக்கிய வெளிநாட்டு கரன்சி, நகைகள்!
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வெளிநாட்டு கரன்சி, நகைகள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமானவரித்துறையினர் 5 நாட்களாக திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் 60 இடங்களில் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
அடையாறு வீட்டிற்கு வந்த வருமான வரித்துறை புலனாய்வு ஆணையர் சுனில் மாத்தூர், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மருமகன் நாராயணசாமி இளமாறன், மகள் ஸ்ரீனிசா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். சுமார் 11 மணி நேரமாக இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இந்த சோதனையில் எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் பல்வேறு ஆவணங்கள், வெளிநாட்டு கரன்சி, நகைகள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வந்த நிலையில் இன்று சோதனையை நிறைவு செய்துள்ளனர்.