Fri. Dec 20th, 2024

புதிய சாலை பெயர்ந்து வருவதாக பொய்யான வீடியோ வெளியிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு!

குளித்தலை அருகே புதிய சாலை பெயர்ந்து வருவதாக பொய்யான வீடியோ வெளியிட்டவர்கள் மீது தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குளித்தலை அருகே தரகம்பட்டியில் புதிதாக போடப்பட்ட தார் சாலை பெயர்ந்து வருவதாக ஒரு சிலர் வீடியோ எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலானது.

இதனையடுத்து, பொய்யான தகவலை பரப்பியதாக ராகுல்காந்தி, தயாளன், சந்திரன், துரை ஆகிய 4 பேர் மீது சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.