Mon. Apr 7th, 2025

இஸ்ரேல்-ஹமாஸ் போர் – தங்கம், வெள்ளி விலை அதிகரிக்குமா? வெளியான தகவல்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டுள்ள நிலையில், தங்கத்தின் விலை சரிவடையத் தொடங்கி உள்ளது.

கடந்த 2 வாரமாக டாலரின் ஆதிக்கத்தால் தங்கத்தின் விலை குறையத் தொடங்கியது.

கடந்த 7ம் தேதி இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே போர் தொடங்கிய சில மணி நேரத்தில் உலக சந்தையில் தாக்கம் எதிரொலித்தது.

இதனால், வரும் நாட்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்று உலக வல்லுநர்கள் தகவல் தெரிவித்தனர்.

ஆனால், இன்று தங்கத்தின் விலை சவனுக்கு ரூ.40 குறைந்தது. தற்போது இஸ்ரேலும், ஹமாஸுக்கும் போர் செய்து வருவதால் கச்சா எண்ணெய்யின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், தங்கத்தின் தேவை குறைந்துள்ளது.

இன்று சர்வதேச பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5% அதிகரித்துள்ளது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு ஏற்படுமோ என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.