பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்!
முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
தமிழகம் முழுவதும் உள்ள பாமக நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து, பல நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள்.
இன்று காலை தமிழக முதலமைச்சரை சந்தித்த அன்புமணி ராமதாஸ், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கைகளை வேகப்படுத்த கோரியும் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல், கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளுக்கு தொலைபேசி மூலம் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பிறகு, விஜய் மக்கள் இயக்கம் அதன் அரசியல் நடவடிக்கைககளில் தீவிரமாக இறங்கி வருகிறது.