அரியலூர் பாட்டாசு தீ விபத்து – உயிரிழப்பு 9ஆக உயர்ந்தது!
அரியலூர் பாட்டாசு தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே நாட்டு பட்டாசு கடை உள்ளது. இந்தக் கடையில் திடீரென்று வெடிகுண்டு வெடித்துச் சிதறியதால் கடை முழுக்க தீ பற்றி எரியத் தொடங்கியது.
இந்தத் தீ மளமளவென்று எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டமானது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பட்டாசு வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.