திருத்தணியில் மயான இடத்தில் வணிக வளாக கட்டிடம் கட்டுவதை எதிர்த்து பெண்கள் போராட்டம்!
திருத்தணி நகராட்சியில் மயான இடத்தில் வணிக வளாக கட்டடங்கள் கட்டுவதற்கு நகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் கட்டுமான பணியை இடித்து தள்ளி போராட்டம் நடத்தினார்கள்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் 10-வது வார்டு பகுதியில் இந்த பகுதியில் உள்ள மூன்றாயிரம் மேற்பட்ட மக்களுக்கு ராஜீவ் காந்தி நகர் மயான இடத்தில் சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர். மேலும் இந்த இடத்தில் தற்போது நகராட்சி நிர்வாகம் வணிக வளாகங்கள் கடைகள் கட்டி விட்டனர்.
மேலும் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் கட்டுவதற்கு செங்கல் கட்டுமான பணிகளை தொடங்கினர்.
இதற்கு இந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்டுமான பணியை நிறுத்தி செங்கல்லை பணியை உடைத்து எறிந்தனர்.
மேலும் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் கடைகள் கட்டி வருவதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் திருத்தணியில் இருந்து சித்தூர் செல்லும் மாநில நெடுஞ் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அந்த பகுதியில் வந்த திருத்தணி சட்டம் ஒழுங்கு போலீசார் நீங்கள் சாலை மறியல் செய்தால் உங்களை கைது செய்து விடுவோம் என்று மிரட்டி பெண்களை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி மிரட்டி துரத்தி விட்டனர்.
உங்களுக்கு கடைகள் கட்டக்கூடாது மயான இடத்தில் என்றால் பெண்கள் நீங்கள் அனைவரும் நகராட்சியில் போய் அமர்ந்து நியாயம் கேட்டுக் கொள்ளுங்கள்,
அல்லது நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுத்துக் கொள்ளுங்கள் என்று திருத்தணி காவல்துறை ஆய்வாளர் மார்ட்டின் பிரேம் ராஜ் தெரிவித்தார்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு சலசலப்பு ஏற்பட்டது பெண்கள் தொடர்ந்து இதுவரை மூன்றாவது முறையாக இந்த பகுதியில் போராட்டம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் –
முருகன்