Mon. Dec 30th, 2024

காவிரி பிரச்சினை விவகாரம் : நாடாளுமன்றம், சட்டமன்றம் எதற்குய்யா இருக்கு..? – சீமான் கேள்வி

காவிரி பிரச்சினை விவகாரத்தில் எல்லாரும் நீதிமன்றத்தை நாடினால் நாடாளுமன்றம், சட்டமன்றம் எதற்கு இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், காவிரி நீர் பிரச்சினை ஒவ்வொரு ஆண்டும் வந்துக்கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் நீதிமன்றத்தை நாடினால் நாடாளுமன்றம், சட்டமன்றம் எதற்கு இருக்கிறது?

காவிரி நீரை பகிர்ந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் நாங்களாக பார்த்துக் கொடுத்தால் தான் பாஜகவிற்கு சீட்டு. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று கூறும் கர்நாடகா அரசு, மின்சாரம் வேண்டாம் என்று கூறவில்லையே என்றார்.