இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன ஆயுதக் குழுக்களுக்கும் போர் முட்டியது – குண்டு மழையால் அலறி ஓடிய மக்கள்!
இஸ்ரேலின் தெற்கு பகுதிகள் மீது ஏவுகணைகளை வீசி பாலஸ்தீன ஆயுதக் குழுக்கள் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
பாலஸ்தீன ஆயுதக் குழுக்கள் ராக்கெட் மழை பொழிந்து வரும் நிலையில், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
காசாவிற்கு அருகில் உள்ள சாலைகளை இஸ்ரேலிய ராணுவம் முடக்கியுள்ளது.
காசாவிலிருந்து அவசர அவசரமாக வீடுகளை காலி செய்து வரும் பாலஸ்தீனிய மக்கள் வெளியேறி வருகிறார்கள்.
காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது சுமார் 5 ஆயிரம் ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குண்டு மழை பொழிவதால் இஸ்ரேல் தலைநகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் பயங்கரமான போர் பதற்றம் அதிகரித்துள்ளது.