Sun. Oct 6th, 2024

எனது மண்- எனது தேசம் இளையோர் அமுத கலச நடைபயண நிகழ்ச்சி!

புதுக்கோட்டை:தேச வளர்ச்சியை வலியறுத்தும் வகையில் இளையோர் அமுதக் கலச நடைபயணம் மற்றும் எனது மண் எனது தேசம் எனும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் நடைபெற்றது.

இந்திய அரசு புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா, புதுக்கோட்டை தலைமைத் தபால் அலுவலகம் மற்றும் கைக்குறிச்சி பாரதி கலை அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து தேச வளர்ச்சியை வலியறுத்தும் வகையில் இளையோர் அமுதக் கலச நடைபயணம் மற்றும் எனது மண் எனது தேசம் எனும் நிகழ்ச்சியை நடத்தினர். நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஜோயல் பிரபாகர் தலைமையில் தலைமைத் தபால் நிலைய கண்காணிப்பாளர் முருகேசன் பேரணியை தொடக்கி வைத்தார்.

பாரதி கல்விக் குழும மேலாண்மை இயக்குநர் தனசேகரன் பாரதி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கைக்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் புறப்பட்ட பேரணி, பாரதி பொறியியல் கல்லூரி வளாகத்தைச் சென்றடைந்தது.

பேரணியில் சுமார் 200 மாணவியர் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக நடைபெற்ற எனது மண் எனது தேசம் நிகழ்ச்சியில் திருவரங்குளம் ஒன்றியத்தின் பல்வேறு கிராம ஊராட்சிகளில் சேகரிக்கப்பட்ட மண், வட்டார அளவில் ஒரே அமுதக் கலசத்தில் சேர்க்கப்பட்டது.

தொடர்ந்து அமுத கால பஞ்ச பிரான் எனும், தேசத்தின் வளர்ச்சியையும் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் வகையிலான ஐந்து உறுதிமொழிகளை நேரு யுவ கேந்திராவின் திட்ட உதவி அலுவலர் நமச்சிவாயம் வாசிக்க, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பாரதி கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் கவிஞர் மு.பா. ரிலையன்ஸ் சமூக மேம்பாட்டு அமைப்பின் மேலாளர் அன்பழகன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வாழ்த்தினர். நேரு யுவ கேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர் மணிமேகலை அனைவருக்கும் நன்றி கூறினார்.

அமானுல்லா புதுக்கோட்டை