Sun. Oct 6th, 2024

ஹெல்மெட்டுக்குள் பதுங்கியிருந்த குட்டி பாம்பு – ஷாக் வீடியோ!

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், திருச்சூரில் உள்ள ஒரு நபரின் ஹெல்மெட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது.

நல்லவேளை அவர் ஹெல்மெட்டை உற்றுப் பார்த்தபோது ஒரு குட்டி பாம்பு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையைச் சேர்ந்த ஒரு நபர் லாவகமாக அந்த குட்டிப் பாம்பை ஹெல்மெட்டிலிருந்து வெளியே எடுத்தார்.

தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஹெல்மெட்டிலிருந்து பாம்பு குட்டி ஒன்று வெளியே வருவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ திருச்சூரில் இருந்து சொல்லப்படுகிறது.