Fri. Dec 20th, 2024

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து – போக்குவரத்துறை அதிரடி!

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 2033 வரை ரத்து செய்யப்பட்டது.

சமீபத்தில் சென்னை- பெங்களூரு சாலையில் வாசன் சென்றுக்கொண்டிருந்தபோது, தனக்கு முன்னால் சென்றுக்கொண்டிருந்த காரை முந்திச்சென்றதோடு அல்லாமல், காருக்கு முன் சாகசம் செய்ய முயற்சி செய்தார்.

அப்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து விலகி பள்ளத்தில் பயங்கரமாக மோதி விழுந்தது. இந்த விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு காயமடைந்தார். மருத்துவமனையில் வாசனுக்கு கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதனையடுத்து, வாசனின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, வாசனின் பைக்கையும், லைசென்ஸ்யும் பறிமுதல் செய்துள்ளனர்.

இவர் செய்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 2033 வரை ரத்து செய்யப்பட்டது.

டிடிஎஃப் வாசன் மீது பல பகுதிகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதால் காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.