இன்னும் 10 நாட்களில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் நியமனம் – அண்ணாமலை அறிவிப்பு!
10 நாட்களில் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஏதுவாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலை தயார் செய்து கட்சி மேலிடத்திற்கு அனுப்பவும் திட்டமிட்டிருப்பதாகவும், எந்தக் குற்றப் பின்னணியும் இல்லாதவர்களை நியமிக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.