வாடிக்கையாளர் ஒருவருக்கு வங்கிக்கணக்கில் ரூ.765 கோடி இருப்பதாக வந்த SMS – அரண்டுபோன நபர்!
தஞ்சாவூரில் வாடிக்கையாளர் ஒருவருக்கு வங்கிக்கணக்கில் ரூ.765 கோடி இருப்பதாக வந்த SMSலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் Kotak Mahindra வங்கியில் கணேசன் என்பவர் வாடிக்கையாளராக உள்ளார்.
இவர் தன் நண்பர் ஒருவருக்கு ரூ.1000 செலுத்தினார். உடனே அவருக்கு ஒரு SMS வந்தது. அந்த SMSல் உங்கள் வங்கி கணக்கில் ரூ.765 கோடி மீதம் உள்ளதாக குறுஞ்செய்தி வந்தது.
இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கணேசன் உடனடியாக வங்கிக்கு சென்று மேலாளரை சந்தித்தார்.
இது தொடர்பாக வங்கி மேலாளர் போனில் தகவல் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.