தமிழ்நாட்டை பின்பற்றி தெலுங்கானாவிலும் இன்று முதல் காலை சிற்றுண்டித் திட்டம்!
தெலுங்கானாவில் இன்று முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டம் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டை பின்பற்றி தெலுங்கானாவில் இன்று முதல் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இன்று தெலுங்கானா மாநிலத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் ஆகியோர் மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை இன்று காலை தொடங்கி வைத்தனர்.
இத்திட்டத்திற்காக அம்மாநில அரசு ரூ.400 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.