சுவையான எள்ளு உருண்டை – எப்படி செய்வது ?
எள்ளு உருண்டை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்பு வகையாகும். மிக எளிதாக எப்படி எள்ளு உருண்டை செய்யலாம் என்று பார்ப்போம் –
தேவையான பொருட்கள்
வெள்ளை எள் – 2 கப்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் – 3
நெய் – தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
பின்னர், வறுத்த எள்ளு, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். கொஞ்சம் மொற மொறப்பாக அரைக்க வேண்டும்.
இதன் பின்னர், ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு இடைவிடாது வறுத்து பாகு காய்ச்ச வேண்டும்.
இந்த சர்க்கரை பாகில் வறுத்த எள்ளை சிறிது சிறிதாக தூவி அத்துடன் ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
இதன் பின், அடுப்பிலிருந்து நமக்கு பிடித்த வடிவில் உருண்டைகளாக பிடித்து கொள்ள வேண்டும்.